அப்போது அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:
2026 சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தை தீர்மானிக்கும் காரணிகளையும் அவற்றின் கூட்டுச் செயல்பாட்டையும் கணிக்க, கடந்த பிப்ரவரி 5ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை 234 சட்டமன்றத் தொகுதியில் அரசியல் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஆய்வாளர்கள், உதவியாளர்கள், 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், பயிற்சி பெற்ற பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு அனைத்து பகுதிகளிலும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தமிழக அரசின் நலத்திட்டங்களில் இலவச வீட்டு மனை பட்டா, காலை உணவு திட்டம், விடியல் பயண திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பாஜவுக்கு வரவேற்பு இல்லை என 63 சதவீதம் பேரும், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக 47 சதவீத மக்களும் தெரிவிக்கின்றனர். 2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடர வேண்டும் என 47 சதவீதம் பேரும், அதிமுக-பாஜ கூட்டணிக்கு வரவேற்பு இல்லை என 51 சதவீத மக்கள் தெரிவிக்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வராக அதிக வாய்ப்புள்ள தலைவர்களில் 77.83 சதவீதத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடத்திலும், எடப்பாடி பழனிசாமி 73 சதவீததுடன் 2வது இடத்திலும், உதயநிதி ஸ்டாலின் 3வது இடத்திலும் உள்ளனர். மேலும் வரும் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு 33.6 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 28.7 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: கருத்துக்கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.
