20 லிட்டர் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் தரமாக இல்லாவிட்டால் புகார் அளிக்கலாம்: உணவு பாதுகாப்பு துறை உத்தரவு

சென்னை: தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் தண்ணீர் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளன. மேலும் தரமற்ற குடிநீரை அருந்துவதால் காலரா, டைபாய்டு, அமீபியாசிஸ், வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி செய்யும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 20 லிட்டர் கேன்களில் லேபிள்கள் தெளிவாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் குடிநீர் நிரப்பும் முன்பு கேன்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியின்போது அதன் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும். அதேபோன்று, தரம் குறைவானது, தப்புக்குறியிடப்பட்டது என அறிக்கை பெறப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது இதுவரை 334 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 227 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.39.69 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து விற்பனை நிலையங்களும் கண்காணிக்கப்படுகிறது. கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்….

The post 20 லிட்டர் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் தரமாக இல்லாவிட்டால் புகார் அளிக்கலாம்: உணவு பாதுகாப்பு துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: