18.72 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத ஆயத்தம்; நாடு முழுவதும் நாளை ‘நீட்’ தேர்வு.! காலை 11.40 மணி முதல் தேர்வு மையத்தில் அனுமதி

சென்னை: இந்த கல்வியாண்டில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். காலை 11.40 மணி முதல் தேர்வு மையத்தில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகிறன்றனர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்தவகையில், 2022-23ம் கல்வியாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நாளை (17ம் தேதி) 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் இந்த தேர்வை எழுதவுள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.  தேர்வர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு எண் (செக்யூரிட்டி பின்) ஆகியவற்றை பதிவு செய்து, அவர்களுக்கான ஹால் டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டில் தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவுரைகள் தெளிவாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன்படி, தேர்வு மையத்திற்குள் காலை 11.40 மணியில் இருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில், 50 மி.லி. சானிடைசர் பாட்டில் கொண்டு செல்லலாம். மேலும் ஹால்டிக்கெட்டை அதில் கேட்கப்பட்டு இருக்கும் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி தவறினால், விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் இருப்பதால், கொரோனா வழிகாட்டல் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது….

The post 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத ஆயத்தம்; நாடு முழுவதும் நாளை ‘நீட்’ தேர்வு.! காலை 11.40 மணி முதல் தேர்வு மையத்தில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: