சென்னை: 150 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் 24 மணி நேரத்துக்கு மூடப்படுகிறது. சம்பிரதாயப்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை ஒரு நாள் முழுவதும் ஐகோர்ட் கதவுகள் மூடப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை முழுவதுமாக அடைக்கப்படுவது வழக்கம். ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றாலும், ஐகோர்ட் மக்களுக்கான பொது இடம் அல்ல என்பதை நினைவூட்டும் விதமாக கதவுகள் மூடப்படுகிறது.
The post 150 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் 24 மணி நேரத்துக்கு மூடல்..!! appeared first on Dinakaran.
