15 ஆண்டுகளுக்கு பிறகு நத்தம் நிலவரித் திட்ட தனி தாசில்தார் பொறுப்பேற்பு

 

பெரம்பலூர்,ஆக. 11: 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் நத்தம் நிலவரித் திட்ட தனி தாசில்தார் பதவி இடம் ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் பாரதி வளவன். பெரம்பலூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பெரம்பலூர் மாவட்ட நத்தம் நிலவரித் திட்ட தனி தாசில்தார் பதிவியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதவியிடத்திற்கு தனி தாசில்தாராக பாரதி வளவன் நியமிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் விடுப்பில் இருந்த தாசில்தார் துரைராஜ் பெரம்பலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post 15 ஆண்டுகளுக்கு பிறகு நத்தம் நிலவரித் திட்ட தனி தாசில்தார் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: