கூடுதல் விலைக்கு மது விற்ற 11 ஊழியர்கள் சஸ்பெண்ட்

விருதுநகர்: கூடுதல் விலைக்கு மது விற்ற 11 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களிடம் ரூ.53 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கடந்த செப்.8, 9ம் தேதிகளில் மேலாண்மை இயக்குநர் விசாகன் திடீர் ஆய்வு நடத்தினார். இதில் 8 கடைகளின் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது உறுதியானது. உள்விசாரணை நடத்தும் வகையில் 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மேலாண்மை இயக்குநர் விசாகனின் உத்தரவின்பேரில் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு 15 டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடைபெற்றது. அப்போது 3 கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளின் பணியாளர்களான முத்துமாரியப்பன், தென்னரசு, முத்துக்குமார் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 9 கடைகளில் ரூ.5 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த கடைகளின் பணியாளர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.53,100 வசூலிக்கப்பட்டது.

The post கூடுதல் விலைக்கு மது விற்ற 11 ஊழியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: