×

100 பந்து கிரிக்கெட் சதர்ன் பிரேவ் சாம்பியன்

லண்டன்: ‘தி ஹண்ட்ரட்’ 100 பந்து கிரிக்கெட் தொடரின் முதலாவது சீசனில், ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான சதர்ன் பிரேவ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பரபரப்பான பைனலில் சதர்ன் பிரேவ் – பர்மிங்காம் பீனிக்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பர்மிங்காம் பீனிக்ஸ் முதலில் பந்துவீசியது. சதர்ன் பிரேவ் அணி 100 பந்தில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. டி காக் 7, வின்ஸ் 4 ரன்னில் வெளியேற, பால் ஸ்டர்லிங் 61 ரன் (36 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), அலெக்ஸ் டேவிஸ் 27, டிம் டேவிட் 15 ரன் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஸ் ஒயிட்லி 44 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ் ஜார்டன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பீனிக்ஸ் பந்துவீச்சில் ஆடம் மில்னி 2, இம்ரான் தாஹிர், பென்னி ஹோவெல், லயம் லிவிங்ஸ்டோன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 100 பந்தில் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பர்மிங்காம் பீனிக்ஸ். தொடக்க வீரர்கள் பெடிங்காம் 0, வில் ஸ்மீட் 2 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணி அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.கேப்டன் மொயீன் அலி 36 ரன் (30 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), லிவிங்ஸ்டோன் 46 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி வெளியேறினர். அதன் பிறகு பிரேவ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பீனிக்ஸ், 100 பந்தில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன் மட்டுமே எடுத்து 32 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கிறிஸ் பெஞ்சமின் 23, ஹோவெல் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரேப் பந்துவீச்சில் கார்ட்டன், ஓவர்ட்டன், தைமல் மில்ஸ், ஜேக் லின்டாட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தி ஹண்ட்ரட் தொடரின் முதல் சாம்பியனாக முத்திரை பதித்த சதர்ன் பிரேவ் அணி கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் பால் ஸ்டர்லிங் ஆட்ட நாயகன் விருதும், பீனிக்ஸ் வீரர் லிவிங்ஸ்டோன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்….

The post 100 பந்து கிரிக்கெட் சதர்ன் பிரேவ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: 117 வீரர்,...