×

9வது ஆசிய கோப்பை மகளிர் டி.20 தொடர் இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்: நேபாளம்-யுஏஇ அணிகளும் பலப்பரீட்சை

கொழும்பு: 8 அணிகள் பங்கேற்கும் 9வது ஆசிய கோப்பை மகளிர் டி.20 கிரிக்கெட் தொடர் நாளை முதல் 28ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம், யுஎஇ, பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், மலேசியா, தாய்லாந்து இடம்பெற்றுள்ளன. இதில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

தம்புலாவில் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஏ பிரிவில் நேபாளம்-யுஏஇ, இரவு 7 மணிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள 8 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா 7 முறை பட்டம் வென்றுள்ளது. 2018ல் மட்டும் பைனலில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா இந்த முறையும் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

The post 9வது ஆசிய கோப்பை மகளிர் டி.20 தொடர் இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்: நேபாளம்-யுஏஇ அணிகளும் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : 9th Asian Cup Women's T20 Series India-Pakistan ,Nepal ,UAE ,Colombo ,9th Asian Cup Women's T20 Cricket Series ,Sri Lanka ,India ,Pakistan ,9th Asian Cup Women's T20 Series India ,Nepale ,Dinakaran ,
× RELATED நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 27...