லண்டன்: இங்கிலாந்து கால்பந்து அணி பயிற்சியாளர் கேரத் சவுத்கேட் பதவி விலகியுள்ளார். யூரோ கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோற்று 2வது இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரத் சவுத்கேட் (53 வயது) தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு பயிற்சியாளர் பொறுப்பேற்ற சவுத்கேட், 102 சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி உள்ளார். அவரது பயிற்சியின் கீழ் 2018 ஃபிபா உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கும், 2022ல் காலிறுதிக்கும் முன்னேறிய இங்கிலாந்து, யூரோ கோப்பையில் 2021 மற்றும் 2024ல் பைனலுக்கு தகுதி பெற்றது.
The post இங்கிலாந்து பயிற்சியாளர் சவுத்கேட் ராஜினாமா appeared first on Dinakaran.