விழுப்புரம், ஜூலை 29: விழுப்புரம் அருகே 10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்து இறந்ததால் வாலிபரை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது தாய், தந்தை உயிரிழந்த நிலையில் தனது அத்தை ஆதரவில் வாழ்ந்து வந்தார். அப்போது அத்தை மகன் விக்னேஷ் (19, கூரியர் நிறுவன ஊழியர்) சிறுமியிடம் அவ்வப்போது தவறான பழக்க வழக்கத்தில் ஈடுபட்டார்.
இதில் சிறுமி கர்ப்பமடைந்து 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சிறுமியை உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது ஆப்ரேஷன் செய்த போது குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post 10ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை இறந்தது appeared first on Dinakaran.
