ஒருவழி பாதையாக மாற்றப்பட்ட பெரம்பலூர் பெரிய கடைவீதி விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரம்பலூர், நவ. 14: பெரம்ப லூரில் ஒருவழிப்பாதையாக பெரிய கடைவீதி மாற்றப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் உள்ள பெரிய கடைவீதி பகுதி கடந்த ஒரு மாதமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ஜவுளி, ரெடிமேடு ஷோரூம்கள் அதிகமுள்ள இப்பகுதியில் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கனரா வங்கியின் அருகிலிருந்தே பேரிகார்டுகள் அமைத்து அதை ஒருவழி பாதையாக மாற்றினர்.தீபாவளி பண்டிகை முடிவடைந்து 2 வாரங்கள் கடந்து விட்ட நிலையில் பண்டிகை காலத்தைவிட மிக அதிகமான பேரிகாடுகளை கொண்டு வந்து தற்போது குவித்துள்ள போக்குவரத்து போலீசார், பழைய நகராட்சி அலுவலகம் முன்பிருந்து பெரிய கடைவீதி நுழைவு வாயில் வரை முழுமையாக மறித்து வாகன ஓட்டிகள் ஒருவழி பாதையை தொடர்ந்து கடைபிடிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால் இதற்காக அமைக்கப்பட்டுள்ள பேரிகாடுகளின் இடையிலுள்ள சந்துகளில் டிராக்டர், ஆட்டோ, பைக்குகள் என போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருக்கு சவால் விட்டு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக வாகனங்களின் விதிமீறல்களை போக்குவரத்து காவல் நிலையத்தின் முன்பாக நின்று கொண்டு கண்டும் காணாமல், நடவடிக்கை எடுக்காமல் போலீசார் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பயமின்றி பைக்குகளில் பாய்ந்து செல்லும் நிலை தான் அதிகரித்துள்ளது.இதுபோல் குறுக்கே வரும் வாகனங்களை எதிர்பாராமல் எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் நடப்பதும், அதனால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதும் அதிகரித்து வருகிறது.இதற்கு தீர்வு கான கனரா வங்கி அருகே போலீஸ் பந்தோபஸ்தை நிறுத்த செய்து விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: