திருவண்ணாமலையில் பரபரப்பு நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் பொதுமக்கள் பரிதவிப்பு

திருவண்ணாமலை, மே 15: திருவண்ணாமலையில் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால், அங்கு குடியிருந்த பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதவித்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஈசான்யம் லிங்கம் எதிரே நகராட்சிக்கு சொந்தமன சுடுகாட்டு பகுதி உள்ளது. இங்கு காலியாக இருந்த பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், செங்கள் சூளை நடத்தி வந்தனர். இதையடுத்து, சித்ரா பவுர்ணமியின் போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கிரிவலப்பாதையை ஆய்வு மேற்கொண்ட போது, இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையொட்டி நகராட்சி நிர்வாகம் அங்கு வீடுகட்டி குடியிருந்தவர்களுக்கு அப்பகுதியினை காலி செய்ய கோரி நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும், அவர்கள் அப்பகுதியில் இருந்து காலி செய்யாமல் தொடர்ந்து அங்கேயே இருந்து வந்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர். அப்போது டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் ஆயுதப்படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, அங்கு வசித்து வந்தவர்கள் அதிகாரிகளிடம் வீடுகளை இடிக்க கூடாது என கூறி எங்களுக்கு வேறு இடம் கிடையாது. இதற்கு மாற்றும் இடம் வழங்கும் படியும், மாற்று இடம் வழங்கும் வரை நாங்கள் இந்த வீட்டில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கு செல்வது என கூறி பெண்கள் கதறி அழுதனர். இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் உரிய மாற்று இடம் தேர்வு செய்து வழங்கப்படும் என கூறினார். இதையடுத்து அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் மற்றும் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், வேலூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் ஆக்கிரமித்து வைத்திருந்த பெட்டிக்கடையை அகற்றினர். மேலும், இங்குவசித்து வந்தவர்கள் சுமார் 30 ஆண்டு காலம் வசித்து வந்ததாகவும், அவர்களுக்கு இந்த முகவரியில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வரி செலுத்தி வந்ததாக அங்கு வசித்து வந்தவர்கள் தெரிவித்தனர். பாக்ஸ்பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வீடுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள். இதேபோல் நகரில் பல்வேறு பகுதியில் ஆக்கிரமித்து கடை, விடுகள் கட்டப்பட்டுள்ளது. அதையெல்லம் அவர்கள் அகற்றாமல் குறிப்பிட்ட இந்த பகுதியில் மட்டும் அகற்றியுள்ளார்கள். இதுபோல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையெல்லாம் அவர்கள் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வசதி படைத்தவர். எங்களை போன்றவர்களை தான் அதிகாரிகள் அப்புறப்படுத்துகின்றனர் என கண்ணீர் மல்க வேதனையோடு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: