புதுகை மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்த ஒருங்கிணைப்பு குழு கலெக்டரிடம் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஏப்.21:  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்து அனைத்து கட்சி சார்பில் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தி அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் ஆகியோர் கூட்டாக நேற்று மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக பெண்களை இழிவாக பேசி வாட்ஸ் அப் வீடியோ வெளியானதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் போராட்டம் வெடித்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் விரும்ப தகாத செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்தகைய சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மாவட்டத்தின் பெரும் பகுதினராக உள்ள இரு சமூகத்தினரிடையே சாதிய மோதல் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் துரித நவடிக்கை எடுக்க வேண்டும். வீடியே வெளியிட்ட அந்த இரண்டு நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கட்சிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு அமைத்து மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வகுமார் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் துறையினர் ஆயிரம் பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதனை வாபஸ் பெற வேண்டும். வீடியோ வெளியிட்டுள்ள 2 நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்க வேண்டும். அரசு மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படும் வகையில் போராட்டம் நடத்த வேண்டாம் என்றார்.

Related Stories: