கடல்மங்கலம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளிக்கு ₹ 50 ஆயிரம் கல்வி சீர்

உத்திரமேரூர், மார்ச் 19: கடல்மங்கலம் கிராமத்தில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளிக்கு ₹ 50 ஆயிரம் மதிப்புள்ள கல்வி சீர் பொருட்களை கிராம மக்கள் வழங்கினர். உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு கடல்மங்கலம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதியில்லாமல் இருந்தது. இதையடுத்து, கிராம மக்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான தளவாட பொருட்கள், நவீன கற்பித்தல் மென்பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான நாற்காலிகள், நோட்டு புத்தகங்கள், பீரோ, டிவி உப்ட சுமார் ₹50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.இதையொட்டி, கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் மேளதாளங்கள் முழுங்க, வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று பள்ளிக்கு வழங்கினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயசங்கர், சேஷாத்திரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி ஆசிரியர் கவிதா வரவேற்றார்.

Related Stories: