தோகைமலை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை

தோகைமலை, மார்ச் 15: தோகைமலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி அடங்கிய பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் கடந்த 10ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் சாந்தா உத்தரவின் பேரில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் 24 மணி நேரமும் வாகனத்தணிக்கை செய்வதற்கு 3 குழுக்கள் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் 24 மணிநேரமும் கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் வாகனத்தணிக்கை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். 4 சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ், பால்வண்டி, சந்தேகித்திற்கிடமான இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு கூடுதலாக பணம் கடத்தப்படுகிறதா என்று ஒவ்வொரு வாகனமாக ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று தோகைமலை பகுதிகளில் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் எஸ்ஐ மணிசேகரன், போலீசார் ஆனந்தன், சரவணன், அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Related Stories: