கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கான கழிவறை திறப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 14:  கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறை கட்டிடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார். கிருஷ்ணகிரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 14 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு பொது கழிவறை வசதி இல்லாததால், குறிப்பாக பெண்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆண் மற்றும் பெண் இருபாலருக்குமான பொது கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி மீனாசதீஷ் தலைமை வகித்து, கழிவறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், குடும்ப நல நீதிபதி கலாவதி, மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான அறிவொளி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலசுப்பிரமணியன், இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி தஸ்னீம், முதன்மை சார்பு நீதிபதி ராமகிருஷ்ணன், சிறப்பு சார்பு நீதிபதி லீலா, 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரகாஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வகுமார், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: