பயிர்காப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வேன் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயி ஆவேசம்

திருவண்ணாமலை, பிப்.6: திருவண்ணாமலை பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு தாசில்தார் மனோகரன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் ஹரக்குமார், பிடிஓக்கள் சஞ்சீவிக்குமார், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டம் தொடங்குவதற்காக முன்னதாக அதிகாரிகள் வேளாண்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில்,திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது. இந்த மாவட்டத்தில் வற்றாத நதிகள் என எதுவும் கிடையாது. மழை இல்லாததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரனம் வழங்கிட வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும்.மாவட்டம் முழுவதும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகையினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வறட்சி பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்ைத சேர்ந்த ஜெயவேலு என்ற விவசாயி, நான் இதுவரை 4 முறை பயிர்காப்பீடு செய்துள்ளேன். இதுவரை எனக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. தற்போது செலுத்தியுள்ள பயிர்காப்பீட்டிற்கு, உரிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்றால், குறைதீர்வு கூட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் காப்பீடு தொகை அனைவருக்கும் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.திருவண்ணாமலை-வேலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. சாலைகளே தரமாக இல்லாத பகுதியில் டோல்கேட் எதற்காக அமைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம் விவசாய பொருட்களை வாகனங்கள் மூலம் விற்பனைக்கு ஏற்றி வரும் போது, விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும் இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே, சுங்கச்சாவடி அமைக்ககூடாது என விவசாயிகள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவாசயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் மனோகரன் தலைமையில் நேற்று நடந்தது. உடன் வேளாண் உதவி இயக்குநர் ஹரக்குமார், பிடிஓக்கள் சஞ்சீவிக்குமார், பிரகாஷ்

Related Stories: