வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உலா வரும் கால்நடைகள்

ஊட்டி, ஜன, 18: வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உலா வரும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அரசு அலுவலர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இவ்வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் அரசு அலுவலர்கள் பலர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இக்குடியிருப்பு வளாகத்தில் குதிரை, ஆடு, மாடு என வளர்ப்பு கால்நடைகள் வந்து படுத்து கொள்கின்றன. காலியாக உள்ள குடியிருப்புகளின் படிகட்டுகளின் அடியில் மாடு, குதிரை போன்றவைகள் கட்டப்படுகின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது. குறிப்பாக குதிரைகள் இப்பகுதியிலேயே உலா வருவதால் ஒருவித துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய்கள் ஏற்டும் அபாயம் உள்ளது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சுற்றிலும் சுற்று சுவர் இல்லாததாலேயே கால்நடைகள் உள்ளே நுழைய கூடிய சூழல் உள்ளது. எனவே வளர்ப்பு கால்நைடகள் குடியிருப்பு வளாகத்திற்குள் வராத வண்ணம் அவற்றை பிடித்து செல்ல வேண்டும். குடியிருப்பை சுற்றிலும் சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

.

Related Stories: