பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம்

திருப்பூர், டிச.7: திருப்பூரில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (8ம் தேதி) நடக்கிறது. அவிநாசி பெத்தநாயக்கன்பாளையம், திருப்பூர் வடக்கு வட்டம் செட்டிபாளையம், திருப்பூர் தெற்கு வட்டம் கண்டியன்கோவில், ஊத்துக்குளி, பல்லடம் இலவந்தி, உடுமலை கொண்டம்பட்டி வி.ஜி.புதூர், மடத்துக்குளம்  கொழுமம், தாராபுரம் குண்டடம், காங்கயம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்தில் முகாம் நடைபெறும். முகாமில், புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கான மனுக்களை வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், பெயர் திருத்தம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Related Stories: