இவ்வாறு அவர்கள் கூறினர். பிளாஸ்டிக் கழிவில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆலை

உடுமலை, டிச.7: உடுமலையில் பிளாஸ்டிக் கழிவில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுகிறது. இதை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா நேற்று ஆய்வு செய்தார். உடுமலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பொருட்டு சிமெண்ட் தொழிற்சாலைக்கு எரிபொருளாக அனுப்பப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் கழிவில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் வகையில், புதிய முயற்சியாக நகராட்சி உரக்கிடங்கில் பைரோலிசிஸ் பிளாண்ட் அமைக்கப்படுகிறது.

இதன்மூலம் தினமும் 250 முதல் 500 கிலோ வரையிலான பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி பைரோ ஆயில் பெறப்படுகிறது. இந்த எரிபொருள் மூலமாக ஜெனரேட்டர், பர்னர் போன்றவற்றில் மாற்று எரிபொருளாக பயன்படுத்தலாம். இந்த ஆலை கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. இதை நேற்று திருப்பூர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா நேரில் ஆய்வு செய்தார்.  விரைவில் பணிகளை முடிக்க கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ராஜாராம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: