ஆப்தமாலிக் அசிஸ்டன்ட் பணி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு

புதுக்கோட்டை, டிச.6:   புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  ஆப்தமாலிக் அசிஸ்டன்ட் பணி காலியிடத்திற்கு பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்துள்ள பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.  இதுகுறித்து கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆப்தமாலிக் அசிஸ்டன்ட்  பணி காலியிடத்திற்கு பதிவுதாரர்கள் மாநில உத்தேச பதிவுமூப்பின்படி பரிந்துரைக்கப்பட உள்ளனர். ஆப்தமாலிக் அசிஸ்டன்ட்  பணி காலியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ நிறுவனத்தில் ஆப்தமாலிக் அசிஸ்டன்ட் கோர்ஸ்   பயின்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்துள்ள பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.  வயது வரம்பு: 1.7.2018 அன்று உள்ளபடி ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியின வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பின் தங்கிய வகுப்பினர் முஸ்லீம், பின்தங்கிய வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை, முற்பட்ட வகுப்பினர் 30 வயதிற்கு மிகாதிருக்க  வேண்டும்.  

மாநில உத்தேச பதிவுமூப்பு  மேற்குறிப்பிட்ட  பணிக்காலியிடத்திற்கு பதிவு மூப்பு பொது பிரிவினர் பொது முன்னுரிமையற்றவர்கள் 28.2.2013 வரையிலும், பொது பிரிவு பொது முன்னுரிமை உள்ளவர்கள் 12.11.2018 வரை பதிவு செய்துள்ள அனைத்து பதிவுதாரர்களும் மாநில உத்தேச பதிவு மூப்பிற்கு கருதப்படுவார்கள்.  மேலே குறிப்பிட்ட பணிக்காலியிடங்களுக்கான கல்வித் தகுதியும், வயது வரம்பும், உத்தேச பதிவு மூப்பும் உள்ள பதிவுதாரர்கள் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றுகள், சாதிச்சான்று மற்றும் முன்னுரிமைப் பதிவு தொடர்பான சான்றுகளுடனும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடனும் வரும் 12ம் தேதிக்குள்  புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயர் மற்றும் பதிவு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: