கூடலூரில் சாலை போக்குவரத்து ஆலோசனைக் கூட்டம்

கூடலூர், நவ. 14: சாலை போக்குவரத்து பிரச்னை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ திராவிடமணி தலைமையில் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நடந்தது.

ஆர்டிஓ முருகையன்(பொறுப்பு), கூடலூர் டிஎஸ்பி ஜெய்சிங், தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூடலூர் இன்ஸ்பெக்டர்  வெங்கடாசலம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அய்யர்சாமி, எஸ்ஐ சத்தியன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்  பிரேம்குமார், நகர திமுக செயலாளர்  ராஜேந்திரன், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உ ள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், கூடலூர் பஜாரில் ராஜகோபாலபுரம் பகுதி முதல் புதிய பேருந்து நிலயம் முனீஸ்வரன் கோவில் வரை சாலையில் உள்ள சென்டர் மீடியனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். போதிய அகலமில்லாத சாலைப் பகுதியில் அமைக்கப்பட்ட சென்டர் மீடியனை அகற்றி சாலையை விரிவாக்கிய பிறகு சென்டர் மீடியனை அமைக்க வேண்டும் என  அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்குள் சாலைகளில உள்ள சென்டர் மீடியன் குறித்து ஆய்வு செய்து  தேவையான இடங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: