வாலிபர் சாவில் மர்மம் மருத்துவ ஆய்வுக்காக உடல் தோண்டி எடுப்பு

ஜெயங்கொண்டம், நவ.1: ஜெயங்கொண்டம் அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதால் 40 நாட்கள் கழித்து மருத்துவ ஆய்வுக்காக நேற்று உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(33). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து ரமேஷ் உடலை அவரது உறவினர்கள் அப்பகுதியில் அடக்கம் செய்தனர். மேலும் ரமேஷ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சிலம்பூர் விஏஓ பாலமுருகன் ஆண்டிமடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ரமேஷ் மனைவி ஜெயலட்சுமி, ரமேஷ் தம்பி சங்கர், தாய் மனோன்மணி, சகோதரிகள் ஜெயந்தி,

செல்வராணி, மாமியார் விருத்தம்பாள், உறவினர் எழிலரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ் சாவில் மர்மம் இருப்பதால் நேற்று ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் கென்னடி, தாசில்தார் கோவிந்தராஜ், விஏஓ பாலமுருகன் ஆகியோர் தலைமையில் ரமேஷின் உடல் அடக்கம் செய்த இடத்தில் தோண்டி உடலை எடுத்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவர் கீதா உடற்கூறு ஆய்வு செய்வதற்காக ரமேஷின் உடலில் சில பாகங்களை சேகரித்து எடுத்துச் சென்றார்.

Related Stories: