மாநில அறிவியல் நாடக போட்டி இன்று நடக்கிறது

புதுச்சேரி, அக். 16:  புதுச்சேரி கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி, முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேனில்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான அறிவியல் நாடக போட்டிகள் நடைபெற்றது. ‘அறிவியலும் சமூகமும்’ என்ற பொதுவான தலைப்பில், டிஜிட்டல் இந்தியா, சுத்தம், சுகாதாரம், உடல் நலம், பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய நான்கு தலைப்புகளை மையமாகக் கொண்டு நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 2 நாடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல், காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியில் இருந்து 4 நாடகங்களும் தேர்வு செய்யப்பட்டன.

 மண்டல வாரியாக தேர்வு செய்யப்பட்ட குழுவினருக்கு இன்று மாநில அளவிலான அறிவியல் நாடக போட்டி நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் 2 நாடகங்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கெடுக்கவுள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் நாடக குழுவினருக்கு பள்ளி கல்வி இணை இயக்குநர் குப்புசாமி பரிசு வழங்கவுள்ளார்.

Related Stories: