தேன்கனிக்கோட்டையில் தீயணைப்பு நிலைய கட்டிடம் திறப்பு விழா

தேன்கனிக்கோட்டை, செப்.19:தேன்கனிக்கோட்டையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.தேன்கனிக்கோட்டையில் செயல்பட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக தளி தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷ், சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தி பேசினார். இதன்பேரில், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்தது. சென்னையில் நடைபெற்ற புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் காணொளி காட்சி வாயிலாக தமிழ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.  அப்போது, தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர். பிரபாகர், பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, நிலைய அலுவலர் ஜானகிராமன், ஓசூர் சிப்காட் நிலைய அலுவலர் சீனிவாசன், திமுக பேரூர் செயலாளர் சீனிவாசன், அதிமுக பேரூர் செயலாளர் நாகேஷ், பிடிஓக்கள் தேவராஜ், சரவணபவா, தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: