அம்பேத்கர் 66வது நினைவு நாள் நெல்லையில் சிலைக்கு கட்சியினர், இயக்கத்தினர் மரியாதை

கேடிசி நகர் : அம்பேத்கர் 66வது நினைவு தினத்தையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லையில் காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாலையணிவித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கவிபாண்டியன், சொக்கலிங்ககுமார், உதயகுமார், மண்டல தலைவர்கள் முகமது அனஸ்ராஜா, மாரியப்பன், ஐயப்பன், மகளிரணி அனிஸ் பாத்திமா, லெனின் பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.

பாஜ சார்பில் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் மாலையணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல்ஆறுமுகம், வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் முருகதாஸ், ஊடக பிரிவு பேச்சிமுத்து, மகளிரணி சுப்புலட்சுமி, காந்தி, டி.எஸ்.முருகன், பாலசுப்பிரமணியன், துளசிபாலா ஆகியோர் பங்கேற்றனர்.

மதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கேஎம்ஏ.நிஜாம் தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மாலையணிவித்தார். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கல்லத்தியான், புறநகர் மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், பாளை பகுதி செயலாளர் மணப்படை மணி, மாநில சட்டத்துறை துணைச்செயலாளர் எம்.எஸ்.சுதர்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆல்வின் பெர்னாண்டோ, ஆறுமுகபாண்டியன், கோல்டன்கான், கொம்பையாபாண்டியன், பொன்வெங்கடேஷ், எடிசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமாகா சார்பில் மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலையணிவிக்கப்பட்டது. மாநில செயலாளர் சிந்தா சுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன், இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகந்நாதராஜா, வர்த்தக அணி செயலாளர் சக்ஸஸ் புன்னகை, நாங்குநேரி வட்டார தலைவர் திருமலை, மாவட்ட  துணைத்தலைவர் மாரியம்மாள், வீரவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரபு, அனந்தராமன் மற்றும் மணிகண்டன், நகரத் தலைவர் துரைராஜ், ஜாகீர், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமமுக கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலையணிவிக்கப்பட்டது. மாநில துணைப் பொதுச்செயலாளர் நெல்லையப்பன் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் துரைப்பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பா, மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டியன், மாநகர தலைவர் பொட்டல் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

விசிக சார்பில் மாவட்ட தலைவர் கரிசல் சுரேஷ் தலைமையில் மாலையணிவிக்கப்பட்டது. மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க்கம் சார்பில் நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கட்சியினர் மாலையணிவித்தனர். இதில் நிர்வாகிககள் தங்கவேல், மணி, மாரியப்பன், பரத், மத்திய, மாநில எஸ்சி/எஸ்டி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர்  மதுபால் தலைமையில் மாலையணிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், செயற்குழு உறுப்பினர் மோகன் மற்றும் ஜோதி, வண்ணமுத்து, செல்வராஜ், இசக்கிமுத்து, காசி, அருள், பாபு உட்பட பலர் பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில மகளிரணி பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் மாலையணிவிக்கப்பட்டது.

ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையிலும், தமிழர் உரிமை மீட்பு களம் மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமையிலும், தென்மண்டல அமைப்புச் செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்டச் செயலாளர் சண்முகராஜ் பாண்டியன் தலைமையிலும் மாலையணிவித்தனர்.

இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் மாலையணிவிக்கப்பட்டது. மாநகர தலைவர் செல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் சின்னத்துரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் முருகன் உள்பட பலர் மாலையணிவித்தனர். சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் சுந்தரராஜ் தலைமையில் வக்கீல் ரமேஷ், சங்கரபாண்டியன், கணேசன், கருப்பசாமி, மாரிமுத்து, சாமிநாதன் ஆகியோர் மாலையணிவித்தனர்.

Related Stories: