மாசு காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மாசுபட்ட காற்றை சுவாசிப்பதனால் நுரையீரல் மற்றும் இதயம் என்பன பாதிப்படையும் என்பது அனைவரும் அறிந்ததே. தூசுத்துணிக்கைகள் வளியுடன் சேர்ந்து உடலினுள் செல்வதால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுதல், சுவாப் பாதைகளில் எரிவுகள் ஏற்படுதல், ஆஸ்துமா, சிறுநீரகப் பிரச்னை என்பன ஏற்படுவதுடன் சில சமயங்களில் புற்றுநோயையும் ஏற்படுத்தும். அதேவேளை இது உடல் எடை அதிகரிப்பிற்கும் வழிகோலும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காற்று மாசு தொடர்பாக மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

முதலில் விஞ்ஞானிகள் எலியை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இதன்படி மாசுபட்ட காற்றினை சுவாதித்த எலிகளில் பின்வரும் பிரச்னைகள் கண்டறியப்பட்டிருந்தன. நுரையீரல்கள் வீக்கமடைந்திருந்தன. இன்சுலினை எதிரக்கும் அளவு அதிகரித்திருந்தது. குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்திரோலின் அளவு 50 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இம்மாற்றங்களினால் எடையும் அதிகரித்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு எலிகளில் நடத்தப்பட்ட போதிலும் மனிதர்களுக்கும் இவ்வகையான ஆபத்து காணப்படுவதை நிராகரிக்க முடியாது எனவும் குறித்த ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Stories: