பாஸ்பேட்டால் உருவான நௌரு தீவு

உலகின் மூன்றாவது சிறிய நாடு நௌரு. பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் இந்தக் குட்டித்தீவின் பரப்பளவு வெறும் 21 சதுர கிலோ மீட்டர். இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை. இதன் நாடாளுமன்றம் யாரென் மாவட்டத்தில் உள்ளது. இங்கே சுமார் 11 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இது வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். நவூரு என்ற சொல் நவூருவ மொழியில் அனாஓரோ, நான் கடற்கரைக்குப் போகிறேன் எனப் பொருள்.

மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இனிமையான தீவு என்றும் நௌருவை அழைக்கின்றனர். பாஸ்பேட்டால் நிறைந்திருக்கும் இந்தத் தீவு பணக்கார நாடாகவும் மிளிர்கிறது. இங்கிருக்கும் பாஸ்பேட் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. அத்துடன் இராணுவம் இல்லாத பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலும் நௌரு இடம்பிடித்துள்ளது.

Related Stories: