என்னாது... பாஜக எங்களுக்கு போட்டியா?: திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி பேட்டி

பாஜகவை நாங்கள் ஒருபோதும் போட்டியாகவே கருதவில்லை என ராமநாதபுரம் தொகுதி தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி தெரிவித்தார்.ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார் .ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி  நேற்று புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது அவர்  கூறியதாவது: ராமநாதபுரம் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன், பா.ஜ.கவை நாங்கள்  போட்டியாகவே கருதவில்லை, இந்துக்களின் புனித தலம் அமைந்துள்ள ராமேஸ்வரத்தை மிகச் சிறந்த சுற்றுலாத்தளமாக  மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். மக்களின் அடிப்படைப் பிரசினைகள் மற்றும் மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: