யோகி ஆதித்யநாத் பதில் பிரியங்கா வந்ததால் பாஜ பயப்படுகிறதா?

உ.பி. தேர்தல் களத்தை கலக்கி வருகிறார் பிரியங்கா காந்தி. கங்கையில் படகில் பயணிக்கும் அவரது பிரசார யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மாயாவதி-அகிலேஷ் கூட்டணியுடன் பாஜவும் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்று லக்னோவில் நேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பிரியங்கா தீவிர அரசியலில் குதித்திருக்கிறார். வரவேற்கிறோம். மதிப்பிற்குரிய தலைவர்தான். அதில் சந்தேகமில்லை. அதற்காக பிரியங்காவின் வரவைக் கண்டு பாஜ மிரளுவதாக சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர். பாஜவின் வாக்கு வங்கியில் அவரால் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்திவிட முடியாது. பாஜவை ஆட்டிப் பார்க்கலாம் என அவர் முன்னர் செய்த முயற்சியெல்லாம் தோற்றுத்தான் போயிருக்கிறது.

2017 சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு உ.பி. பாய்ஸை (ராகுல், அகிலேஷ்) சேர்த்ததின் பின்னணியில் இருந்தவர் பிரியங்காதான். ஆனால் என்ன ஆனது. எல்லாம் போனது. இன்னொரு கூட்டணி தன்னைத்தானே மெகா கூட்டணி என சொல்லிக் கொள்கிறது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் - ராஷ்டிரிய லோக் தளம். இந்த அணியால் பாஜவுக்கு மிரட்டல் என சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது. 2014 மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. ஜீரோவை எதனுடன் பெருக்கினாலும் ஜீரோதான் வரும். எனவே பூஜ்யங்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார். ஜீரோவை எதனுடன் பெருக்கினாலும் ஜீரோதான்

வரும். எனவே பூஜ்யங்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: