மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் தேர்தலே நடக்காது: அசோக் கெலாட் தாக்கு

‘‘மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவில் அடுத்த தேர்தலையே பார்க்க முடியாது. சீனா, ரஷ்யாவின் வழியில் நம் நாடும் சென்றுவிடும்’’ என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: மோடி ஆட்சியின் கீழ், நாடும் ஜனநாயகமும் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளது. மீண்டும் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவில் அடுத்த தேர்தலையே பார்க்க முடியாது. அப்படியே நடந்தாலும் கூட சீனா, ரஷ்யாவில் நடப்பதைப்போல, அது ஒரு கண்துடைப்பாகவே இருக்கும். அங்கெல்லாம் ஒரே கட்சியே ஆட்சி செய்யும்.

தேர்தலுக்கு முன்பாகவே அதிபர், பிரதமர் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள். தேர்தலில் ஜெயிப்பதற்காக எதையும் செய்யத் துணிபவர் மோடி. அவர், பாகிஸ்தானுடன் போர் செய்யும் அளவுக்கு சென்றுவிடுவாரோ என மக்களும் எண்ணுகிறார்கள். மோடி கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி நாடகமாடுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். அவர் மட்டும் பாலிவுட்டில் சென்றிருந்தால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல பிரபலமாகி இருக்கலாம். இவ்வாறு அசோக் கெலாட் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: