இந்திய மக்களின் ரசனை தனி லோக்கலுக்கு மாறும் சர்வதேச ‘ஐக்யா’

ஐதராபாத்: வளர்ந்த நாடுகளில் டாலரில் விற்கும் இந்த நிறுவனத்துக்கு ஏகப்பட்ட மவுசு. வீட்டுக்கு தேவையான மரப்பொருட்கள் உட்பட எல்லாம் கிடைக்கும் இந்த பிரமாண்ட ஷாப், இந்தியாவில் முதன்முறையாக ஐதராபாத்தில் சில மாதம் முன் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் டோக்கன் போட்டு உள்ளே அனுப்பும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை. கேப்டீரியாவில் மட்டும் உணவு, தின்பண்டங்கள் விற்பனை அமோகமாக இருந்தது. மற்றபடி, பர்னீச்சர், அழகு சாதனங்கள், சமையலறை பொருட்கள் விற்பனை பெரிதாக இல்லை.

இதை உணர  ஆரம்பித்து விட்டது  இந்த நிறுவனம். சீனாவில் திறந்தபோது செய்த தவறை இந்தியாவில் செய்யக்கூடாது என்று தீர்மானமாக உள்ளது. இதனால் முதலில்  இரு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. ஒன்று, விலையை குறைப்பது. அடுத்து, முழுக்க முழுக்க லோக்கலாக பொருட்களை உருவாக்கி விற்பது. வளர்ந்த நாடுகளில் விற்கும் பொருளின் விலையை அதே அளவில் இந்தியாவில் விற்க முயற்சித்தால் அதை வாங்க மக்கள் தயாரில்லை. இது இந்த நிறுவன நிர்வாக அதிகாரிகளுக்கு பெரும் பாடத்தை கற்றுத்தந்தது. அதுபோல, மேற்கத்திய பாணி சமையல்  அறை பொருட்கள், மற்ற வீட்டு பொருட்கள் இங்கே செல்லுபடியாகாது என்று புரிய வைத்தது.

இந்த இரண்டையும் நாங்கள் சரி செய்து விட்டோம். நாங்கள் விற்கும் 7500 வகையான பொருட்களின் விலையையும் இந்தியர்களுக்கு ஏற்ற விலைக்கு குறைத்து விட்டோம். மேலும், பொருட்களின் வடிவமைப்பும் மாற்றப்பட்டு விட்டது. இதற்காக உள்ளூரில் சில சிறிய நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் தந்து , பொருட்களை வாங்கி ெகாள்கிறோம்’ என்று ஐக்யா இந்தியாவின் திட்ட அதிகாரி அமிதாப் பாண்டே கூறினார்.  ஐதராபாத் வெற்றியை தொடர்ந்து மற்ற நகரங்களில் ஐக்யா ஷாப்பை துவங்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: