வயலூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

திருச்சி: வயலூர் முருகன் கோயிலில் இன்று இரவு சூரசம்ஹாரம் நடக்கிறது. நாளை முருகன்தேவசேனா திருக்கல்யாண உற்சவம் நடை பெற உள்ளன.

வயலுார் முருகன் கோயிலில் கந்த சஷ்டி உற்சவம் கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் காலையில் முருகனுக்கு லட்சார்ச்சனை, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காலை மற்றும் மாலை இருவேளையும் வெவ்வேறு வாகனங்களில் சிங்கார வேலர் புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு அன்னவாகனத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி யானை முகாசுரனுக்கு பெருவாழ்வு அளித்தார். நேற்று இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி சிங்கமுகாசுரனுக்கு பெருவாழ்வு அளித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (13ம்தேதி) இரவு நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின், முருகன் பார்வதி தேவியிடமிருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடை பெறும். மாலையில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார். அவரைத் தொடர்ந்து முத்துக்குமார சாமி பல்லக்கில் வருவார். பின்னர் சூரசம் ஹாரம் நிகழ்ச்சிகள் கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் துவங்கும். முருகனும், சூரபத்மனும் கடும் போரிடும் காட்சிகள் விழா நிகழ்ச்சியாக நடைபெறும். இரவு 8 மணிக்கு முருகன் சூரபத்மனின் தலையை கொய்து அவனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடை பெறும். பின்னர் வள்ளி தேவசேனாசமேத முத்துக்குமார சாமி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நிறைவாக நாளை (14ம் தேதி) இரவு முருகன்தேவசேனா திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

Related Stories: