சென்னை: ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்றவர், தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். டிசிப்மா என்கிற டீசேல்ஸ் சர்வதேச பிலிம் அன்ட் மீடியா அகடாமி வழங்க, தாஜ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.சி.அய்யப்பன் தயாரிக்கும் படம், ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, திருமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியுள்ள எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். சென்னை லயோலா கல்லூரியில் மீடியா பாடப்பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், டிசிப்மாவின் டீன் ஆக செயல்பட்டு வருகிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, பாபி இசை அமைக்கிறார். நவீன் குமார் ஹீரோவாகவும், ‘மிஸ் தமிழ்நாடு’ லாவண்யா ஹீரோயினாகவும் அறிமுகமாகின்றனர். மற்றும் பெங்களூரு மாடல் சுவாதி, பிரேமா உள்பட பலர் நடிக்கின்றனர். காதல் மற்றும் குடும்ப சென்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாகிறது….
The post ஹீரோயினாக அறிமுகமாகும் மிஸ் தமிழ்நாடு appeared first on Dinakaran.