அலங்காநல்லூர், மே 29: கொய்யா சாகுபடியில் உயர் விளைச்சல் பெறுவது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர். அலங்காநல்லூர் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் சின்ன இலந்தைக்குளம் கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு கொய்யாவில் பதியம் போடுதல் பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கொய்யாவை பாதுகாப்பதற்காக ஏர்-லேயரிங் முறையில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான செயல் விளக்கங்களை வேளாண் கல்லூரி மாணவி கார்த்திகா விவசாயிகளுக்கு வழங்கினார். வணிக பணி முறையில் எவ்வாறு கொய்யா செடிகளை பாதுகாப்பது பக்குவப்படுத்தி உயரக விளைச்சல் பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
The post வேளாண் மாணவிகள் சார்பில் கொய்யா சாகுபடியில் விளைச்சல் அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.