வேட்புமனுதாக்கல் செய்யும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு-பெரம்பலூர் எஸ்பி ஆய்வு

பெரம்பலூர் : மனுதாக்கல் செய்யுமிடங்களுக்கான பாதுகாப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் நேரில் ஆய்வு செய்தார். தேர்தல் நடத்தைவிதிகளை தவறாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என போலீசாருக்குஉத்தரவிட்டார்.சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (12ம் தேதி) தொடங்கியது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரம்பலூர் தொகுதிக்கா ன தேர்தல் நடத்தும் அலுவலரான, பெரம்பலூர் சப்.க லெக்டர் அலுவலகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு, குன்னம் தாலுகா அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மனுத்தாக்கல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதி முறைகளை தவறாமல் நடைமுறைப்படுத்தவும், வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் ஏதுவாக, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் குன்னம் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு பணியில் இருந்த டிஎஸ்பிக்கள் பெரம்பலூர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன், மங்கலமேடு மோகன்தாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பெரம்பலூர் பால்ராஜ், குன்னம் ரவீந்திரன் ஆகியோரிடம் மனுத்தாக் கல் நடைபெறும் நாட்களில் பின்பற்ற வேண்டிய சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் நடைமுறைப்படுத்திடவும், வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பினை அளிக்கவும், போக்குவரத்துக்கு பாதிப்பின்றி மனுத்தாக்கல் செய்ய வருவோரை ஒழுங்குப்படுத்தவும் உத்தரவிட்டார்….

The post வேட்புமனுதாக்கல் செய்யும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு-பெரம்பலூர் எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: