வேட்டவலம் அருகே சம்பந்த விநாயகர் கோயிலில் லட்சதீப விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வேட்டவலம் அருகே சம்பந்த விநாயகர் கோயிலில் நடந்த லட்சதீப விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம் சம்பந்த விநாயகர் கோயிலின் 66ம் ஆண்டு லட்சதீப விழா கடந்த 13ம் தேதி தேரடி வீதி உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சித்திரை முதல் நாள் காலை 11 மணியளவில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 4 மணியளவி ல் காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் தண்டபாணி குழுவினரின் சிறப்பு நாதஸ்வர கச்சேரி ஆகியவை நடந்தது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் வேட்டவலம் ஜமீன் வாரிசு சம்பத்குமார் பண்டாரியார் லட்சதீப விழாவின் முதல் தீபத்தினை ஏற்றி வைத்து லட்சதீபம் ஏற்றும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர் ரா.ஜேந்திரன், கோயிலின் அறங்காவலர்கள் ரகுபதி, முருகையன் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றி, லட்ச தீப தரிசனமும், சுவாமி தரிசனமும் செய்தனர்.

விழாவையொட்டி கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சியும், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து இரவு 11 மணியாவில் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் சம்பந்த விநாயகர் வீதியுலா வாண வேடிக்கை, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நகரின் மாட வீதிகளின் வழியே நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களாக நடை பெற்று வந்த லட்சதீப விழா நேற்று மாலை உற்சவத்துடன் நிறைவடைந்தது. லட்சதீப விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகர் கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவினையொட்டி எஸ்.ஐ யுவராஜ் தலைமையில் 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post வேட்டவலம் அருகே சம்பந்த விநாயகர் கோயிலில் லட்சதீப விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: