குளச்சல், ஏப்.24: வெள்ளிச்சந்தை அருகே குருந்தன்கோடு கொல்லமாவடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார். அவரது மனைவி சிவரஞ்சனி. நூறுநாள் வேலைதிட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது 17 வயது மகள் பாராமெடிக்கல் படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் சிவரஞ்சனி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் அவரது மகள் தனியாக இருந்துள்ளார். மதியம் சாப்பிடுவதற்காக சிவரஞ்சனி வீட்டுக்கு வந்து பார்த்த போது, மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீசில் சிவரஞ்சனி புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.
The post வெள்ளிச்சந்தை அருகே சிறுமி மாயம் appeared first on Dinakaran.
