வெள்ளகோவில் அருகே ரூ.7.90 லட்சத்தில் நலத்திட்ட பயணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்

 

வெள்ளகோவில், மே 6: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வேலம்பாளையம் ஊராட்சி, முருகம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.7.90 லட்சம் மதிப்பீட்டில் மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் பொதுகழிப்பிடம் கட்டும் பணியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வட்டார வளர்ச்சி அலுவலர் எத்திராஜ், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி.முருகானந்தம், இளைஞர் அணி ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

The post வெள்ளகோவில் அருகே ரூ.7.90 லட்சத்தில் நலத்திட்ட பயணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: