வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேருக்கு மருத்துவ பணி: தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவு

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முன்பு மருத்துவ கல்வி இயக்குநரகம் கீழ் ஓராண்டு பணிபுரியும் நபர் மட்டுமே மருத்துவ பணி மேற்கொள்ள முடியும் என இருந்த விதியை தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டில் படித்த 500 பேருக்கும் உடனடியாக பணி அமர்த்த சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதியும் இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை கருதி தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

The post வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேருக்கு மருத்துவ பணி: தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: