வெல்லம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

 

ஈரோடு, செப். 1: ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள் (30 கிலோ) விற்பனை செய்யப்படும். அதன்படி, இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 3,500 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,900 மூட்டையும், அச்சு வெல்லம் 400 மூட்டையும் வரத்தானது. இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,320 முதல் ரூ.1,420 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,400 முதல் ரூ.1,510 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,400 முதல் ரூ.1,440 வரை என்ற விலையில் விற்பனையானது.

கடந்த வாரத்தை விட நாட்டுச்சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், உருண்டை வெல்லம் மூட்டைக்கு ரூ.100ம், நாட்டுச்சர்க்கரை மூட்டைக்கு ரூ.60ம், அச்சுவெல்லம் மூட்டைக்கு ரூ.30ம் சரிவடைந்து விற்பனையானதாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post வெல்லம் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு appeared first on Dinakaran.

Related Stories: