வீராணம் ஏரியின் முக்கியமான தண்ணீர் திறப்பு வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் தண்ணீர் திறப்பு வாய்க்காலாக ராதா மதகு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் 10 கிலோ மீட்டர் நீளமும், 1600 ஏக்கர் பாசன பரப்பளவும் கொண்டதாக இருக்கிறது. வீராணம் ஏரியில் முழுமையாக தண்ணீர் தேக்கப்பட்டு காலம் காலமாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது இந்த ராதா மதகு பாசன வாய்க்கால் மூலம் மட்டுமே நடைபெற்று வருகிறது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பாசன வாய்க்கால் தூர்ந்துபோய், ஆகாயத்தாமரைகள் மற்றும் கருவேலம் மரங்கள், முட்புதர்கள் என சூழ்ந்து காணப்பட்டது. இதனை உடனடியாக தூர்வார வேண்டும். அப்போதுதான் தண்ணீரானது கடைக்கோடி வயல் வரை சென்று பாசனம் பெறும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் செய்தியாக வெளியானது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரும் பணியை துவக்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …

The post வீராணம் ஏரியின் முக்கியமான தண்ணீர் திறப்பு வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: