விழிப்புணர்வு ஏற்படுத்த ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் பயணம்

தஞ்சாவூர், மே. 20: இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களே ஹெல்மெட் அணியாத நிலையில், ஹெல்மெட் போட்டு சைக்கிள் ஒட்டி கொண்டு தஞ்சையில் சாலையில் சென்றவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தஞ்சை காந்திஜி சாலையில் ஒருவர் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு சைக்கிளில் சென்றார். ‘தலைகவசம் உயிர் கவசம்’ என பல வகைகளில் தலைகவசம குறித்து விழிப்புணர்வு செய்தாலும் யாரும் கேட்பதாகவே இல்லை. ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களை போலீசார் பலமுறை பிடித்து அபராதம் விதித்தும் எச்சரித்தும் அனுப்புகின்றனர். ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.

தலைக்கவசம் இல்லாமல் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இந்நிலையில் இவரோ சைக்கிள் ஓட்டும் போதே ஹெல்மெட் போட்டு போறாரேனு அவர் சைக்கிளை பின் தொடர்ந்து சென்று கேட்ட போது தனது பெயர் ராஜா என்றும். விழிப்புணர்வுக்காக ஹெல்மெட் போட்டு செல்வதாக கூறி ஆச்சரியப்படுத்தினார். அனைவரும் ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்டுங்கள் என கேட்டுக்கொண்டார்.

The post விழிப்புணர்வு ஏற்படுத்த ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: