விருத்தாசலம், மே 20: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தரசோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர்- அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுக்கு முன் ரூ.12 கோடியே 60 லட்சம் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சவுந்தரசோழபுரத்தில் இருந்து வெள்ளாற்றின் அக்கரையில் உள்ள அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு வரை இணைப்பு சாலையாக தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டு அதன் மூலம் வெள்ளாற்றை கடந்து இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்துவரும் கன மழை காரணமாக வயல்வெளி பகுதியில் உள்ள மழைநீர் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்காக வந்தது. இதில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் மேம்பால பணியும் நிறைவடையாமல் தற்காலிக பாலமும் உடைபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
The post விருத்தாசலம் அருகே 2 மாவட்டங்களை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.
