விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை.. கொரோனா காலத்தில் பொது நலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிப்பு என ஐகோர்ட் கருத்து

சென்னை : பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு விதித்த தடை உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ கடந்த 30ம் தேதி தமிழக அரசு, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும், ‘என்றும் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்க குறைந்தது 5 நபர்களுக்காவது  அனுமதி அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதகள், மத உரிமைகளை பின்பற்ற வாழ்வாதார உரிமை முக்கியமானது என்றும் கொரோனா காலத்தில் பொது நலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்….

The post விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை.. கொரோனா காலத்தில் பொது நலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிப்பு என ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: