வானூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கி மிரட்டிய 2 பேர் கைது

 

வானூர்: வானூர் அருகே உள்ள கோட்டக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மோகன்ராஜ் (37) என்பவருக்கும் புதுச்சேரி ஆலங்குப்பம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் ராஜ்குமார் (37) என்பவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சிகள் குறித்த விவாதத்தின்போது வாட்ஸ் அப் குழுவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி கோட்டக்கரையில் மோகன்ராஜ் தனியாக நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பரான நாவப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கிருபாநந்தன் (23) ஆகியோருக்கும் மோகன்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த இருவரும் மோகன்ராஜை ஆபாசமாக திட்டி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மோகன்ராஜ் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்குமார், கிருபாநந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post வானூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கி மிரட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: