சிவகிரி,டிச.8: வாசுதேவநல்லூர் கிளை நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, நூறாவது புரவலராக தன்னை இணைத்துக்கொண்டார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை நூலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நூலக அலுவலர் சண்முகசுந்தரம், கிளை நூலகர் அமுதாவிடம் ரூ1000வழங்கி 100-வது புரவலராக இணைந்து கொண்டார். நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் ராமர், செயலாளர் மாடசாமி, பொருளாளர் பிள்ளையார்சாமி, துணைச்செயலாளர் சுரேஷ்,கௌரவ ஆலோசகர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post வாசுதேவநல்லூர் நூலகத்தில் நூலக அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.
