வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு-பரபரப்பு

 

கரூர், ஜூன் 5: கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8மணிக்கு துவங்கியது.  இதற்கு முன்னதாக, கரூர் பாராளுமன்ற தொகுதியில போட்டியிட்ட 54 வேட்பாளர்களின் முகவர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை கல்லூரி நுழைவு வாயில் முன்பு கூடினர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற மனநிலையில், ஆயிரக்கணக்கான முகவர்கள் ஒரே நேரத்தில் ஒரே நேரத்தில் செல்ல முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், ஒரு பெண் முகவர் கிழே விழுந்து காயமடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தினர். இந்த பிரச்னை காரணமாக கல்லூரியின் நுழைவு வாயில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு-பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: