வாக்காளர் அட்டை – ஆதார் இணைக்க வேண்டும்; கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 1.8.2022 முதல் தொடங்கி செயல்படுத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும், அல்லது voter helpline என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கொண்டுவரும் படிவம் 6பி-னை பூர்த்தி செய்து கொடுத்தும் அல்லது தங்கள் பகுதிக்குட்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாகவும் அல்லது வாக்காளர் உதவி மையம், இ-சேவை மையம், மக்கள் சேவை மையம் மூலமாகவும் அல்லது சிறப்பு முகாம் நாட்களில் அலுவலர்களை அணுகியும் ஆதார் எண்ணை சமர்ப்பித்து அதனை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். 15.8.2022 முதல் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் இ – சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இ – சான்றிதழ் பெற வெற்றிகரமாக ஆதார் எண்ணை இணைத்த பின்பு வரும் குறியீட்டு எண்ணினை குறித்து கொண்டு https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தில் சென்று வாக்காளரின் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து பின்னர் வரும் ஓடிபி எண்ணையும் உள்ளீடு செய்தால் வரும் அட்டவணையில் வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட படிவம் 6B-ன் குறியீட்டு எண்ணையும் உள்ளீடு செய்து சான்றிதழை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்….

The post வாக்காளர் அட்டை – ஆதார் இணைக்க வேண்டும்; கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: