லால்குடியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் விற்பனை கிடங்கு அமைக்கும் பணி துவக்கம்

 

லால்குடி, செப்.2: லால்குடி அருகே வேளாண் விற்பனை குழு வளாகத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியை செளந்தரபாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். லால்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை குறைந்த லாபம் கிடைக்கும் போது சேமித்துவைத்து, அதிக லாபமாக விற்கும் காலங்களில் வேளாண் பொருட்களை விற்பனை செய்து பயன்பெறும் வகையில் வேளாண் விற்பனை கிடங்கு அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வந்தது.

அதையடுத்து ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் லால்குடி ஒழுங்குமுறை விற்பனை குழு கட்டுப்பாட்டில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கு அமைக்கும் பணியை செளந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம், உறுப்பினர் மதியழகன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைதலைவர் பாலசுப்ரமணியன், வேளாண் ஒழுங்கு முறை விற்பனை குழு மேலாளர்கள் விவேக், சங்கீதா மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post லால்குடியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் விற்பனை கிடங்கு அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: